புதிய ஜனாதிபதி - சில தகவல்கள்!

23.09.2024 08:24:15

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க பற்றிய சில தனிப்பட்ட தகவல்கள்.

    

 

முழு பெயர் - திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.

பிறப்பு - 1968.11.24.

பிறந்த ஊர் – கலேவெல - நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.

ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.

உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து - பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.

1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.

அரசியல் வாழ்க்கை...

1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் செயற்பாட்டு அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார்.

1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினார்.

2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையும் தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார்.

2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

2010 இல் தேசிய பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைமைப்பொறுப்பு கையளிக்கப்பட்டது.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.

2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சபையில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் பதவி வகித்தார்.

2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

2024 ஜனாதிபதி தேர்தலிலும் போட்டி. இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் அதிகம்.

ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்...

1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது மாற்று கட்சியில் உள்ளார்)

2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது ஜே.வி.பி.2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.

2019 ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியாக களமிறங்கிய ஜே.வி.பி. 3 சதவீதம்வரையான வாக்குகளைப் பெற்றது.