'பொம்மை நாயகி'

16.01.2023 21:59:02

இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று பொங்கலை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு வாத்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள