பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னார் பிரதேச சபை தவிசாளர்!

14.09.2021 05:57:44

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் மொஹமட்  முஜாஹிர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 185  உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசாரணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹிர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் கடமைகளை நிறைவேற்றும் போது, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ், அவர் குற்றங்களை இழைத்துள்ளமை, சாட்சியங்கள் ஊடாக நிரூபனமானது.

இதனையடுத்து நாளை (14) முதல் அவரை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபையின் அங்கத்தவர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸின் கையொப்பத்துடன் இன்று வெளியானது.