சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு
09.02.2024 12:45:42
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய , சிறைச்சாலையில் 196 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி கொல்கத்தா உயர் நீதிமன்றில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் , பெண்கள் சிறைச்சாலையில் ஆண்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.