
NASA-வில் 4,000 பேர் பணிநீக்கம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவமான NASA, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் பெரும் மனிதவள குறைபாட்டை சந்திக்க உள்ளது. மொத்த பணியாளர்களின் 20%, சுமார் 3,870 பேர், பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகமானோர் மூத்த அதிகாரிகள், நிர்வாகத் திறமைகள் உள்ளோர் எனக் கூறப்படுகிறது. Politico வெளியிட்ட அறிக்கையின்படி, 2,145 சிரேஷ்ட ஊழியர்கள் ஏற்கனவே விலகும் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு, வருமான பரிசுகள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. |
ஜூலை 20-ஆம் திகதி, வாஷிங்டனில் உள்ள Smithsonian Air and Space Museum அருகே, NASA ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து "NASA Needs Help" என்ற அமைப்பின் வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். "NASA தாக்கப்படுகிறது; அதை பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம்" என்ற முழக்கத்துடன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகம், போக்குவரத்துத் துறை செயலாளரான Sean Duffyயை NASA-வின் இடைக்கால நிர்வாகியாக நியமித்தது. ஜூலை 16 அன்று, அமெரிக்க நியாயவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு, ஒரு கடிதம் வழியாக, புதிய நிர்வாகம் சட்டப்பூர்வ அதிகாரங்களுக்குப் புறம்பாக செயல் படுவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான வெள்ளை மாளிகையின் பட்ஜெட்டில், NASA-வுக்கு 25% நிதிக்குறையும், 5,000 பணியாளர்கள் குறையும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது. இது 1960-களுக்குப் பின் NASA சந்திக்கும் மிகச் சிறிய பட்ஜெட்டாக இருக்கலாம். |