சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

23.11.2021 09:09:32

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

தீயணைப்பு துறை வீரர் பத்மநாபன் என்பவர் வீடு தரைமட்டமானதில் இடிபாடுகளில் சிக்கிய அவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஏற்கனவே மூதாட்டி ராஜலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.