மக்கள் இயக்கத்தில் உருவாகும் புதிய அணி.. விஜய் அதிரடி

01.08.2023 11:52:09ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் நடந்து வருகிறது. விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. மேலும் படிக்க நடிகர் விஜய் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். அதுமட்டுமின்றி அவர்கள் மத்தியில் பேசும் போது, ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது. இவ்வாறு விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் அரசியல் கட்சியில் உள்ளது போல் வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணியினர் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந்தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. 6-ந்தேதி கேரள நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:- வருகிற சனிக்கிழமை இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட உதவிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.