புரசைவாக்கம் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் பாதுகாப்பு

05.08.2023 18:43:17

புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. என்.ஐ.ஏ. அலுவலகத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.