ஈட்டி எறிதல், ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்-வீராங்கனைகள் விவரம் - டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல், ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் குறித்த செய்தியை காணலாம்.
நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல் வீரரான இவருக்கு வயது 24. 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 24 தேதி அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் பிறந்தவர். ஜூனியர் பிரிவில் உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் பிரிவில் உலக அரங்கில் 16 வது இடத்தில் உள்ளார்.
ஷிவ்பால் சிங் - ஈட்டி எறிதல் வீரரான இவருக்கு வயது 26, 1995 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இவர், ஈட்டி எறிதல் பிரிவில் உலக அரங்கில் 18 வது இடத்தில் உள்ளார்.
பிரணதி நாயக் - சீருடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்) வீராங்கனையான இவருக்கு வயது 26. மேற்கு வங்க மாநிலம் பிங்காலா மாவட்டத்தில் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெண்கல பதக்கம் வென்றுள்ள இவர், உலக தர வரிசையில், 8வது இடத்தை பிடித்திருக்கிறார்.