தான் இயக்கும் DD-3 படத்தின் பெயரை அறிவித்தார் நடிகர் தனுஷ்

25.12.2023 06:03:22

நடிகர் தனுஷ் பா பாண்டி படத்தின் மூலம் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தற்போது நடிகர் தனுஷ், தான் நடிக்கும் 50-வது படத்தை இயக்கி வருகிறார்.தொடர்ந்து, தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் சர்ப்ரைசாக வெளியிடப்பட்டு இருக்கிறது. தனது வுண்டர்பார்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில், இளம் பட்டாளமே களம் இறங்கியுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் நடிகை அனிக்கா, பிரியா வாரியர், பவிஷ், ரபியா, மேத்யூ, ரம்யா, வெங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.