நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோக வெற்றி.
|
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது பேசினர். |
|
இதன் பின்னர் டிவிஷன் பெஞ்ச் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். திமுக வெளிநடப்பு செய்து விட்ட நிலையில், அவையில் இருந்தவர்களில் 22 பேர் எதிராக வாக்களித்தனர். 5 பேர் வாக்களிப்பிலிருந்து விலகி இருப்பதாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. "நூலிழையில் தவறிய தனிப்பெரும்பான்மை" - விஜய் இறுதியாக மீண்டும் உரையாற்றிய விஜய் தவெகவிற்கு நூலிழையில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப்போய் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், "எந்த அணியும் இல்லாமல் தனி அணியாக களம் கண்டோம். 1967, 1977 போல சாமானியர்களின் ஆட்சியை அமைப்போம் என மக்களிடம் கூறினோம். கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் 34.92 சதவிகிதம் மற்றும் 1.72 கோடி வாக்குகளுடன் தவெகவை தனிப்பெரும் கட்சியாக மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த அரசை யாரும் சிறுபான்மை அரசு என நினைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. சிறுபான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டும் அரசு இது." என்றார். "இது எல்லோருக்குமான அரசாக இருக்கும், எந்த பாகுபாடும் இருக்காது. இதையெல்லாம் போகப் போக புரிந்து கொள்வார்கள். மக்கள் நலன் முக்கியம் என்பதே எங்களின் நிலைப்பாடு." என்று விஜய் பேசினார். |