மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் வடக்கு, கிழக்கில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
06.01.2021 06:33:35
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் வடக்கு, கிழக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
அதன்படி இந்த நினைவு தினம் யாழ். கொக்குவிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.