கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்.
கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் மற்றும் கண்டன போராட்டங்கள் நடைபெறும் காரணமாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே இயக்கப்படும் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன. தமிழகப் பயணிகளும் ஓசூரிலேயே இறக்கிவிடப்படுவதால், எல்லையோரப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்த இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அசாதாரண சூழலைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.