செட்டிகுளம் பிரதேச வைத்திய அதிகாரிக்கு கொரோனா
24.08.2021 07:50:32
வவுனியா, செட்டிகுளம் பிரதேச வைத்திய அதிகாரிக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் கடந்த இரு மாதங்களில் 200 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்காக களப்பணி ஆற்றி வந்த செட்டிகுளம் பிரதேச வைத்திய அதிகாரி தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதன்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.