கனடா தூதுவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

13.10.2021 05:31:10

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினோன் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும் கொரோனா தொற்று நிலைமைகள் பற்றி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

 அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையின் அருங்காட்சிய கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.