யாழில் விசேட அதிரடிப்படையினர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் !

06.07.2021 08:29:49


 யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரியாலை பகுதியில் மணல் கொள்ளையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்ய முற்பட்ட போது , கொள்ளையர்கள் மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகாரணங்களால் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.