மகாராஷ்டிராவிற்கு சிவப்பு எச்சரிக்கை !

14.07.2021 10:20:45

மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை, தானே, புனே, கோலாப்பூர், சதாரா, ரத்னகிரி, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே குறித்த மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதேநேரம் எதிர்வரும் நாட்களில் மழையுடனான காலநிலை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.