மாகாண சபை குறித்து சு.க அதிரடி

01.01.2021 09:14:41

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளதால், குறித்த நிறுவனங்களைச் செயற்பாட்டில் வைத்திருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.