இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழா

26.05.2022 15:26:17

கண்காட்சி மையத்தில் 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த உள்ளனர்

 

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022-ஐ பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு ட்ரோன் திருவிழாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி பின்னர் கிசான் ட்ரோன் விமானிகளுடன் உரையாடுகிறார்.

பின்னர் திறந்தவெளி ட்ரோன் செயல் விளக்கங்களை காண உள்ளார். கண்காட்சி மையத்தில் 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த உள்ளனர்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ட்ரோன் நிறுவனங்கள் அடங்கிய 1600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.