
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை
அரசு பஸ் டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர் மணப்பாறை, வளநாடு அருகே அரசு பஸ் டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஊத்துக்குழி அருகே உள்ள ஆவிகாலபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் வயது 44. இவர் இலுப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மனைவியை அவரது தந்தை வீட்டில் விட்டு விட்டு வீட்டை பூட்டி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு அறைகளில் இருந்த இரண்டு பீரோகளும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 சவரன் நகை கொள்ளை போயிருந்தது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.