ஆரம்பமாகிறது கட்சித்தாவல்கள்!

14.05.2022 15:47:15

கபீர் ஹாசிம், ஹெக்டர் அப்புஹாமி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 10 முதல் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரத்தில் கட்சியில் இருந்து விலக இருந்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலையிட்டு அதனை எப்படியோ தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் நாளைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி, அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

அதேவேளை நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வரும் சுனில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நிமல் லங்சா ஆகியேர் இன்று மதியம் பிரதமரின் செயலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், இவர்கள் நாளைய தினம் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யக் கூடும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.