சாவகச்சேரியில் கடல் மணல் கடத்தல்!

18.01.2025 08:00:00

சாவகச்சேரி பொலிசார் நேற்று அதிகாலை கடல் மணல்களை அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் வாகனங்களை கைப்பற்றியுள்ளனர். குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகள் பன்றித் தலைச்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள பகுதியில் சோதனை மேற்கொண்டு, டிப்பர் வாகனங்களில் கடல் மணல் ஏற்றியவர்கள் உரிய அனுமதி பத்திரம் இல்லாமல் அதனை எடுத்துச் செல்லும் பொது சுற்றிவளைத்தனர் .

இதனைத் தொடர்ந்து, இந்த இரு டிப்பர் வாகனங்களின் சாரதிகளை சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு முற்படுத்தி, அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.