காகிதப் பைகள் வரலாறு தெரியுமா?
ஜூலை 12 – உலக காகிதப் பை தினம்: காகிதப் பைகள் வரலாறு தெரியுமா?
காகிதப் பை எளிதில் மக்கும் தன்மை கொண்டவை, 100% மறுசுழற்சி செய்யக்கூடியவை. பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடுகையில், காகிதப் பைகள் விலங்குகளுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. பைகள் மட்கும் தன்மை கொண்டதால், உயிர் உரம் தயாரிக்கவும் உதவுகிறது.
பிளாஸ்டிக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 12 ஆம் திகதி உலக காகிதப் பை தினமாகக் கொண்டாடப்படுகிறது. காகிதப் பைகளைப் பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவும் முடியும்.
காகிதப்பைகளின் வரலாறு1852ஆம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பிரான்சிஸ் வோல் முதன் முதலில் காகிதப் பை இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்1971இல் மார்கரெட் இ நைட் தட்டையான கீழ் காகிதப் பைகளை உருவாக்கக்கூடிய ஒரு இயந்திரத்தை வடிவமைத்தார்.
இவர் ‘மாளிகைப் பையின் தாய் ‘ என்று அழைக்கப்பட்டார். ஏனெனில் இது முன்பு இருந்ததை விட அதிகமானவற்றை எடுத்துச்செல்லும் அளவுக்குத் தயாரிக்கப்பட்டது. பொருட்களை எளிதாக சேமித்து வைக்க மடிப்பு பக்கங்களைக் கொண்ட சதுர கீழ் காதிதப் பைகளை ( SOS Style Paper Bag) 1883ஆம் ஆண்டில் சார்லஸ் ஸ்டில்வெல் கண்டுபிடித்தார். இந்தப் பைகள் மருந்தகங்கள், உணவு சேவை, மளிகைக் கடைகள் மற்றும் பல வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
1912இல் மினசோட்டாவின் செயிண்ட் பால் நகரில் உள்ள மளிகைக் கடைகளில் மக்கள் தங்களுடைய மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ஏற்ற வகையில், காகிதப் பைகளில் துளைகளை இட்டு அதற்கு காப்புரிமை பெற்றனர். பின்னர் அதற்கு டியூபனர் ஷொப்பிங் பேக் ( Deubener’s Shopping Bag ) என்று பெயரிட்டனர். இருப்பினும் இந்த காகிதப் பைகள் பிளாஸ்டிக் பைகளால் மாற்றப்பட்டன.
2015ஆம் ஆண்டு , உலகின் மிகப்பெரிய காகித ஷொப்பிங் பை இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்தனர்.
காகிதப் பைகளின் முக்கியத்துவம்
உலகெங்கிலும் உள்ள மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் காகிதப் பைகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். ஆனால், இன்னும் சிலர் சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப் படாமல் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூலை 12 காகிதப் பை தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் நன்மைகள் மற்றும் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் .
2023இம் ஆண்டில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகிதப் பைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கொண்டாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் காகிதப் பைகளை பயன்படுத்த வலியுறுத்தி கருப்பொருள் ஒன்று அறிவிக்கப்பட்டு அதன் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு கருப்பொருள், “If You Are Fantastic, Do Something Drastic to Cut the Plastic, Use Paper Bags”. இது ஷொப்பிங் செய்யும் போது பிளாஸ்டிக்கை விட காகிதப் பைகளைப் பயன்படுத்த நினைவூட்டும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. காகிதப் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது. அவை எளிதில் மட்கும் தன்மை கொண்டவை.
காகிதப் பை பயன்படுத்துவதன் நன்மைகள்…
இவை எளிதில் மட்கும் தன்மை கொண்டவை, 100% மறுசுழற்சி செய்யக்கூடியவை. பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடுகையில் , காகிதப் பைகள் உயிரினங்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. பைகள் மட்கும் தன்மை கொண்டதால், உயிர் உரம் தயாரிக்க உதவுகிறது.
காகிதப் பைகளின் தீமைகள்…
காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்ட வேண்டி இருக்கும். பால் போன்ற திரவப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. உறைய வைக்கும் உணவை காகிதப் பைகளில் எடுத்துச் செல்ல முடியாது. கனமான உணவு மற்றும் மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்வது கடினம்.
காகிதப் பை தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
காகிதப்பை பயன்படுத்துவது பற்றியும் பிளாஸ்டிக் போன்றவற்றால் ஏற்படும் மாசுக்களிலிருந்து நம் உலகை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது