கடற்படைத் தளபதி - ஜனாதிபதி சந்திப்பு.

10.07.2026 14:45:47

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.  

அதன்படி, மரபுப்படி நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ கூட்டத்தில், ஜனாதிபதி, இலங்கை கடற்படையின் 27ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, புதிய பதவியின் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி ஜனாதிபதிக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார்.