புலிட்சர் விருதை வென்ற இரண்டு இந்தியர்கள்.
07.05.2026 08:10:00
|
அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கும் புலிட்சர் பரிசை இரண்டு இந்தியர்கள் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இதழியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
|
அதில், இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே மற்றும் சுபர்ணா சர்மா ஆகிய இருவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த ஆர்.கே. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சேர்ந்தவர். சுபர்ணா சர்மா டெல்லியை சேர்ந்தவர் ஆவார். இவர்களுடன் சேர்ந்து ஜப்பான் நாட்டை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. |