இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் போட்டி இன்று !

18.07.2021 15:35:11

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த பல போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்துவார்கள் என இலங்கை அணியின தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அணியின் வீரர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.