தமிழக ஆளுநர் பதவியில் இழுபறி!

29.07.2024 07:47:15

10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது.

பிரதமராக மோடி தொடர்ந்து 3-வது முறையாக கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  புதிய ஆளுநர்களை  நியமித்தும், ஆளுநர்களை மாற்றம் செய்தும்  வருகின்றார்.

 

அந்தவகையில் மராட்டியம், புதுவை உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும்  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இதனால் ஆர்.என்.ரவிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? அல்லது அவருக்கு பதிலாக தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா? என்பது தொடர்பாக 2 நாட்களில் தெரியவரும் எனக் கூறப்படுகின்றது.