முதல் நாளிலேயே செம வசூல்!.

17.08.2026 08:35:13

வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

இந்த திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. கருப்பு என்கிற மெகா ஹிட்டுக்கு பின் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் இது.  கருப்பு கடவுள் சம்பந்தப்பட்ட கதை என்றால் விஸ்வநாத் & சன்ஸ் 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பணக்கார வாலிபரின் கதை. ஒரு நல்ல பீல் குட், குடும்ப செண்டிமெண்ட், காமெடி கலந்த திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது..

நேற்று படம் வெளியானதில் இருந்தே இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இது பட குழுவினரை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் 27 கோடி வரை வசூல் செய்து விட்டதாகவும் இந்தியாவில் இந்த திரைப்படம் 15 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.