வரி நிவாரணங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரியளவான நிதி இழப்பு .

21.05.2024 09:15:30

அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிகளை வழங்கிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரி நிவாரணங்களினால் 978 பில்லியன் ரூபா அதாவது 98 ஆயிரம் கோடி ரூபா இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் பொருளாதார நிலமைகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்றின் PUBLICFINANCE. lk என்ற இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இழக்கப்பட்டுள்ள வரி வருவாயின் அளவு, கடந்த 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு சேர்க்கப்பட்ட வரி வருவாயில் 56 வீதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31 ஆம் திகதி இலங்கையின் நிதி அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட வரி செலவுகள் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வழங்கியுள்ள வெவ்வேறான வரி நிவாரணங்களால் அரசாங்கம் இழந்துள்ள வருவாயை இந்த அறிக்கை மூலம் தெரிந்துக்கொள்ள முடியும் எனவும் PUBLICFINANCE. lk என்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related