விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய PR நிறுவனம்!

28.02.2026 09:01:10

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு குறித்து சோஷியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் பேச வேண்டும் என்று கூறி PR நிறுவனம், சோஷியல் மீடியா இன்புளூயுசர்களை கேட்டுக்கொண்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியிருக்கிறார். கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜய்க்கும், இலங்கை தமிழரான சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், திருமண வாழ்க்கையை தாண்டி, நடிகை ஒருவருடன் விஜய் உறவில் இருப்பதாகவும், அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறி அவரது மனைவி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். விஜய்கு ஆதரவாக பேச வேண்டுமாம் இந்த மனுவில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள், விஜய்கு எதிராக புயலை கிளப்பியிருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்த புயலை அமைதிப்படுத்த விஜய்க்கு ஆதரவாக PR நிறுவனம் இறங்கியிருப்பதாகவும், சோஷியல் மீடியா இன்புளூயுசர்களை விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவின் சதி செயல் இது என்று பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஷயத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டும் இந்த ஆடியோவில், ஸ்ரீராம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும் நபர், செய்தி பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பி, விஷயம் கையை மீறி போவதை போல இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், வழக்கமாக நமக்கு என ஒரு டூல் கிட் இருக்கும், அதை பின்பற்றி இந்த விஷயத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். கரூர் வழக்கில் சிக்க வைக்க பார்த்தீர்கள், திமுகவும்-பாஜகவும் சேர்ந்து சிபிஐ விசாரணை என டெல்லியில் 2 நாட்கள் அலைய வைத்தீர்கள், மக்களை சந்திக்க முயன்றபோது, அதற்காக வழிமுறைகளை உருவாக்கி தடுத்தீர்கள், இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை போல வீடியோவை போட்டு திமுகவுக்கு எதிராக ஒரு ஹாஷ் டேக் கிரியேட் செய்யப்போகிறோம்.

அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்று அந்த நபர் கேட்டுக்கொண்டார். ஒரே அவமானம் சங்கீதாவை விட்டுடுங்க இதில் குறிப்பாக சங்கீதாவை அட்டாக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அந்த நபர், இந்த விவகாரத்திற்கு பின்னால் திமுகதான் இருக்கிறது என்பது போல தகவல்களை பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த உரையாடலில் PR நிறுவனம் சார்பில் பேசும் நபர், விஜய்யை Chief.. Chief என்று குறிப்பிட்டிருந்தார். இதை விமர்சித்திருந்தார். "உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ராணுவ தளபதியுடன்.. விமானப்படை தளபதி ஆலோசனை. நடுவுல Chief, Chief னு யாரை சொல்றாங்க?" என கலாய்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பான ஆடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.