
அஜித் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!
10.04.2025 07:02:00
நடிகை நயன்தாரா தற்போது தமிழில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த டெஸ்ட் படம் வெளியாகி இருந்தது. அதற்க்கு கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. |
நயன்தாரா எப்போதும் தனக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார். அது போல அவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம். பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் அஜித் மூலமாக நல்ல வரவேற்ப்பை பெற்ற பிறகு தெலுங்கில் வக்கீல் சாப் என்கிற பெயரில் ரீமேக் செய்தனர். அதில் தான் நயன்தாராவை நடிக்க மறுத்துவிட்டாராம். தனது ரோல் சிறியதாக இருக்கிறது என சொல்லி நடிக்க மறுத்துவிட்டாராம். |