பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்த சிறப்பு கெளரவம்

10.05.2022 12:54:36

தமிழ் திரையிசையின் சாதனை பாடகியாக இருக்கும் பி.சுசீலாவுக்கு  புதிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறது தபால் துறை. அவரது உருவத்தில் தபால் தலையும், அவரது உருவம் அச்சிட்ட  சிறப்பு தபால் உறையையும் வெளியிட்டிருக்கிறது. இதை சென்னையில் இருக்கும் அவரது வீடு தேடிச் சென்று கொடுத்து மரியாதை செய்திருக்கிறது தபால் துறை. 

 

திரையிசையில் இதுவரைக்கும் 30 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை புரிந்திருக்கும் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும் அவர் வாழ்ந்து வரும் சென்னை தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பதுமே தமிழக ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.