ஜனநாயகன் ரிலீஸ் திகதி மாற்றப்பட்டது.
ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டதை மறந்துவிடக்கூடாது. படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. திரையரங்கில் பல தரப்பினரும் வர வாய்ப்பிருப்பதால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என ஒரே இடத்தில் கூடி, மோசமான சூழல் உருவாகலாம்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படம், விஜயின் கடைசி படமாகவும், அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாகவும் இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியல் அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
ஆனால், இந்தப் படத்தின் ரிலீஸ் திகதி, படத்தின் மையக்கரு, விஜய்யின் அரசியல் பின்னணி ஆகியவற்றால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அக்டோபர் மாதமே வெளியாக வேண்டிய இந்தப்படத்தை ஜனவரி 2026, பொங்கல் தினத்தில் ரிலீஸ் திகதி மாற்றப்பட்டது. ஆனால், விஜயின் அரசியல் பிரவேசத்தால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய வெளியீடு சரியாக இருக்கும் என்பதால் திகதி மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தால் ஜன நாயகன் படத்தின் இசை வெளியிட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விழாவிற்கு 40,000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக ஆதரவாளன சூர்யா சேவியர்,
‘‘ஜனநாயகன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தை ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் இருக்கிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் ஜனவரியில் திரையிட அனுமதிக்கக்கூடாது. தவெக நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாடற்றதாகவே இருக்கிறது. இது சாதாரண ஒரு கலைப் படைப்பு என்று கடந்துவிடமுடியாது. தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படமாதலால் திட்டமிட்ட வன்முறைகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.
திரையரங்கங்கள் சூறையாடப்படலாம். ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டதை மறந்துவிடக்கூடாது. படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. திரையரங்கில் பல தரப்பினரும் வர வாய்ப்பிருப்பதால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என ஒரே இடத்தில் கூடி, மோசமான சூழல் உருவாகலாம். தமிழ்நாடு முழுமையும் ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு தியேட்டருக்கும் பொலிஸார் காவல்துறை பாதுகாப்பு அளித்துக் கொண்டிருப்பது இயலாத காரியம்.
எனவே சட்டமன்றத்தேர்தல் முடிந்த பிறகு மே மாதம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கலாம். தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாளர்களுக்கு தவெக நடவடிக்கைகள் துணை போவதாக கரூர் உள்ளிட்ட சம்பவங்கள் மெய்ப்பிப்பதாக கருதமுடிகிறது. ஜனநாயகன் என்பதை விட பிணநாயகன் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.