சர்வதேச ரீதியில் முடங்கிய சமூக ஊடகங்கள்!

05.03.2024 17:16:00

சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன.

இதனால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்று (5) இரவு சுமார் 9.19 (இலங்கை நேரப்படி) மணி முதல் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் #facebookdown #facebook #instagramdown போன்ற ஹேஸ் டக்குகளை பயனர்கள் பதிவுவிட்டு வருகினர்.