அரசாங்கம் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளாது

26.01.2021 08:50:05

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லைஎன அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏறபடுத்தும் நடவடிக்கைகள் எதிலும் அரசாங்கம் ஈடுபடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை பிரச்சினைகளிற்கு பொருத்தமான தீர்வு என இலங்கை அரசாங்கம் கருதும்தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை அரசாங்கத்திற்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்போவதில்லை அது நாட்டின் நலனிற்கு உகந்தது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.