ஈரான் முதல் அதிபர் பனிசதர் மரணம்

10.10.2021 12:56:33

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஈரான் நாட்டின் முதல் அதிபரான அபோஹசன் பனிசதர், 88, பிரான்சில் நேற்று காலமானார்.
ஈரானில் கோமேனி தலைமையில் அமைந்த புதிய அரசில் அதிபராக பதவி வகித்தவர் அபோஹசன் பனிசதர்.

பழமைவாதியான கோமேனிக்கும், முற்போக்குவாதியான பனிசதருக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. இதைத் தொடர்ந்து உயிருக்கு அஞ்சி, பனிசதர் பிரான்சுக்கு தப்பிச் சென்றார். ஈரானின் முதல் அதிபரான பனிசதர், 16, மாதங்கள் மட்டுமே அப்பதவியில் இருந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வசித்து வந்த அவர், நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் நேற்று அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.