தெலுங்கில் வெளியாகும் எல்ஜிஎம் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
ஹரிஷ் கல்யாண்-இவனா நடிப்பில் ஜூன் 28ம் தேதி தமிழில் வெளியான படம் ‘எல்.ஜி.எம்’. இப்படத்தின் தெலுங்கு வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தனர். Powered By PauseUnmute Loaded: 1.47% Fullscreen காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்தார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இப்படம் ஜூன் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ந்நிலையில் எல்ஜிஎம் படத்தின் தெலுங்கு வெளியிட்டு தேதிஐ படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி எல்.ஜி.எம் திரைப்படம் தெலுங்கில் நாளை ஆகஸ்ட் 04ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.