எரிபொருள் விலைகளை உயர்த்தியது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
|
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
|
அதேவேளை, ஓட்டோ டீசலின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவாகவும், சுப்பர் டீசலின் விலை லீற்றருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 543 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் 424 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 490 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 397 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 543 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த விலைத் திருத்தம் நவம்பர் 1ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. |