இலங்கை சைபர் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தயாராகவேண்டும்- சுப்பிரமணிய சுவாமி

15.10.2021 14:15:59

இலங்கை சைபர் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தயாராகவேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கான ஆய்வகத்தில் உரையாற்றிய அவர்,

“21ம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு என்பது இராணுவங்களை வலுப்படுத்துவது அல்லது விமானங்கள் மேலே பறப்பது குறித்த விடயமில்லை.

எந்த நாடும் பெரியதுமில்லை சிறியதுமில்லை. உலக நாடுகள் சைபர் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தங்ளை எவ்வாறு தயார்படுத்துகின்றன என்பதே அந்த நாடுகள் வல்லரசுகளா அல்லது வல்லரசுகள் இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

இதனடிப்படையில் நாடுகள் தங்கள் முன்னுரிமைகள் நோக்கங்கள் மூலோபயங்கள் வளங்களை திரட்டல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.