மகாராஷ்டிரா லொறி விபத்தில் 10இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

15.02.2021 10:32:12

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் பப்பாளி பழங்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  16 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த லொறி கிங்காவோன் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது லொறியில் பயணித்த 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அபோடா, கெர்ஹலா மற்றும் ராவர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.