யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிபத்து!
09.05.2026 14:21:13
|
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது |
|
இந்நிலையில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினரும் இணைந்து தீ அணைப்பில் ஈடுபட்டனர். தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. |