
பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை!
இந்தியா தற்போது சக்திவாய்ந்த பங்கர்-பஸ்டர் வேரியண்ட் அக்னி ஏவுகணையை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இது பூமிக்கு அடியில் ஆழமாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள், கட்டளை மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் போன்ற மிகுந்த பாதுகாப்பு கொண்ட இராணுவ வசதிகளை அழிக்க வடிவமைக்கப்படுகிறது. இந்த புது வேரியண்ட், அக்னி-5 ICBM மீது அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. |
இது 7,500 கிலோ எடை கொண்ட பாரிய வெடிகுண்டை, 80-100 மீட்டர் ஆழம் வரை கான்கிரீட் மற்றும் நிலத்தை துளைத்து வெடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா இரானின் அணுசக்தி தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்த பிறகு, இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இரண்டு மொடல்கள் தற்போது DRDO-வால் உருவாக்கப்பட்டு வருகின்றன: 1- விமான நிலையங்கள், ரன்வே போன்ற தளங்களைத் தாக்கக்கூடிய ஏர்-பர்ஸ்ட் ஏவுகணை 2- அமெரிக்காவின் GBU-57 bunker-buster போன்று, ஆழமாக மறைந்துள்ள கட்டமைப்புகளுக்கு நேரடி தாக்கம் கொடுக்கும் deep-penetration ஏவுகணை இந்த புதிய மொடலின் வேகம் Mach 8 முதல் Mach 20 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிரி தடுப்புத் தொழில்நுட்பங்களைத் தாண்டி தாக்குதல் நடத்த முடியும். மிகுந்த எடையால் புதிய அக்னி மொடலின் தூரம் 2,500 கி.மீ வரை குறைந்தாலும், இது பிராந்திய உள்நாட்டு பாதுகாப்பு நோக்கங்களுக்கு போதுமானது. இந்த திட்டம், இந்தியாவின் சாதாரண (non-nuclear) ஸ்டிராடஜிக் தாக்குதல் திறனை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். DRDO தற்போது மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இதை முன்னெடுத்து வருகிறது. |