பிரித்தானிய மகாராணி காலமானார்!

08.09.2022 20:22:00

பிரித்தானிய மகாராணி உயிரிழந்துவிட்டதாக பக்கிம்காம் அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பால்மோராவில் உடல்நிலை மோசமானதை அடுத்து சிகிச்சை பெற்று வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் இன்று காலமானார்.
வியாழனன்று ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்கொட்டிஷ் தோட்டத்தில் கூடினர்.

 

ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், புதிய அரசராகவும், 14 கொமன்வெல்த் நாடுகளுக்கு தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் ராணியை மருத்துவக் கண்காணிப்பில் வைத்த பிறகு, ராணியின் குழந்தைகள் அனைவரும் அபெர்டீனுக்கு அருகிலுள்ள பால்மோரலுக்குப் பயணம் செய்தனர்.

ராணியின் பேரன், இளவரசர் வில்லியம், அவரது சகோதரர் இளவரசர் ஹரியுடன் அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.