ஐ.எம்.எப். பிரதிநிதிகள் - சஜித் சந்திப்பு
பொறுப்புள்ள கட்சி என்ற ரீதியில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தையும் சிக்கலையும் ஐக்கிய மக்கள் சக்தி நன்கு புரிந்துகொண்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை நேற்றுப் பிற்பகல் பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கவும், முதலீடுகளை வலுப்படுத்தவும், மக்களின் பொருளாதாரப் பலத்தை வலுப்படுத்தவும் வழிவகுக்க வேண்டும் என்று இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர், சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழுவின் பிரதித் தலைவர் கத்யா ஸ்விரிட்சென்கா, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹான் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்