சீன பிரதிநிதி குழு - உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட திட்டம்

14.01.2023 22:25:06

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் இன்று(14) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

குறித்த குழுவினர் ஜனவரி 18ஆம் திகதி வரை நாட்டில் தங்கி கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சென் ஜாவோ தலைமையில் இந்த குழு இலங்கை வந்துள்ளது.

அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்..