இதுதாண்டா தவெக ஆட்சி 'ஆபரேஷன் கிளீன்'.

20.05.2026 08:34:12

சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் ஒழிக்கவும், சமூக விரோத சக்திகளை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகர காவல்துறை நள்ளிரவில் அதிரடியான 'ஸ்பெஷல் டிரைவ்' எனப்படும் 'ஆபரேஷன் கிளீன்' நடவடிக்கையை மேற்கொண்டது. நகரின் முக்கிய பகுதிகளில் மறைந்திருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குறிவைத்து திட்டமிடப்பட்ட இந்த சோதனை, ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி சோதனையில், தி.நகர் பகுதியில் மட்டும் 18 ரவுடிகளும், அடையாறு பகுதியில் 16 ரவுடிகளும் என மொத்தம் 34 பேர் ஒரே இரவில் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக காவல்துறையின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளும் இந்த சோதனையின் போது பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "குற்றவாளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை" என்பதை மீண்டும் ஒருமுறை இந்த அதிரடி நடவடிக்கை நிரூபித்துள்ளது. 

 

இத்தகைய அதிரடி சோதனைகள் சென்னை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று காவல் ஆணையரகம் எச்சரித்துள்ளது. ஒரே இரவில் காவல்துறையினர் நடத்திய இந்த துணிச்சலான வேட்டை, சென்னை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன், சமூக விரோதிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.