சுதந்திர தினத்தன்று போராட்டத்திற் அழைப்பு !

03.02.2024 18:58:18

சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி  மட்டக்களப்பு உட்பட வடகிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.


மட்டு.ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த போராட்டத்திற்கு தமிழ் பேசும் சமூகம் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய குறித்த  போராட்டம் கல்லடி பாலத்திலிருந்து காந்திபூங்கா வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.