அங்குனகொலபெலச ரஞ்சன் சிறைக்கு மாற்றப்பட்டார்

26.01.2021 08:51:48

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பிலுள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததால் அங்குனகொலபெலச சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துக் கைதிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலையில், அதே நாளில் ரஞ்சனை பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலைத்துக்கு அனுப்ப சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.