ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தொடர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், ஐ.நா சபையின் 81வது பொதுக்கூட்டம் இன்று(22) ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 28ம் திகதி வரை இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக நியூயார்க்கில் ஐ.நா தலைமையகத்தில் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா - ஐரோப்பிய நாடுகளின் உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உக்ரைன் - ரஷ்யா போர், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.