
சினிமா டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு.
கர்நாடக மாநில அரசு திரையரங்க டிக்கெட் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் முக்கிய முடிவை அறிவித்துள்ளது.
இதன்படி, பெங்களூரு உட்பட கர்நாடகத்தின் அனைத்து மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வரிகள் சேர்க்கப்படலாம்.
இருப்பினும், 75 அல்லது அதற்கும் குறைவான இருக்கைகளைக் கொண்ட மல்டி-ஸ்க்ரீன் திரையரங்குகள் மற்றும் பிரீமியம் வசதிகளை வழங்கும் திரையரங்குகளுக்கு இந்த 200 ரூபாய் கட்டண வரம்பு பொருந்தாது.
இவை தங்கள் வசதிகளுக்கு ஏற்ப உயர் கட்டணங்களை வசூலிக்கலாம். இந்த மாற்றத்தை அமல்படுத்த, கர்நாடக சினிமா கட்டுப்பாடு விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடம்பர வசதிகளை விரும்புவோர் அதற்கேற்ப உயர் கட்டணம் செலுத்தி படம் பார்க்கலாம்.